பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களின் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் பிரபலங்களைக்கூட நம்மில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு நெருங்க செய்துள்ளது. பலர் தங்களின் அன்பிற்குரிய திரை மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களைப் பின்தொடர முடிகிறது. பிரபலங்கள் தங்களின் ரசிகர்களுடன் உரையாடும் களமாக சமூக வலைத்தளங்கள் உள்ளன. ஆனால் இந்த சமூக வலைத்தளங்கள் சில நேரங்களில் சங்கடங்களையும் தருகிறது.

ரேடியோ ஆர்.ஜே.வாக இருந்து தமிழின் பிரபல பாடகியாக முன்னேறியவர் பாடகி சுசித்ரா. இவர் ஆயுத எழுத்து போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவரது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாகவே சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது டுவிட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடர்ச்சியாக பல சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டது. சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி உள்ளிட்ட பலரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் அடுத்ததடுத்து பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : அமலா பாலின் திருமண முறிவுக்கு தனுஷ் காரணமா?

இந்நிலையில் சுசித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில், “சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிவந்த பகிர்வுகளை சுசித்ரா வெளியிடவில்லை. அவை அனைத்தும் போலியானவை. இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பமே மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களுக்கு இது எந்தளவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் அறியமுடிகிறது” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : வேலையில்லா பட்டதாரி 2 – மீண்டும் சௌந்தர்யாவின் கணவரை தாக்கும் தனுஷ்…?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்