கலகலப்பு 3 கன்ஃபார்ம் – சுந்தர் சி

0
165

கலகலப்பு மூன்று நான்கு என்று அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என்று சுந்தர் சி. கூறியுள்ளார்.

ஆள் மாறாட்டம், ஆள் கடத்தல், பணப்பரிமாற்றம், பெட்டி மாறுதல் என்று நகைச்சுவைக்கு உத்தரவாதமுள்ள விஷயங்களை ஒன்றாக கலக்கி கலகலப்பு, கலகலப்பு 2 படங்களை எடுத்துள்ளார் சுந்தர் சி. இப்போது வெளியான இரண்டாம் பாகமும் ஹிட். எடுக்க எளிமையான விஷயம், வெற்றிக்கு உத்தரவாதம் என்பதால் இதன் மூன்றாம், நான்காம் பாகங்கள் அடுத்தடுத்து வரும் என்று கூறியுள்ளார். கலகலப்பு 2 படத்தில் நடித்த ஜீவா, ஜெய், சிவாவை வைத்தே மூன்றாம் பாகத்தை அவர் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 8 கோடியில் தயாரான இந்தப் படத்தின் தமிழக உரிமை மட்டும் 11 கோடிகளுக்கு விலை போயுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, வெளிநாட்டு உரிமை, டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகள், டிஜிட்டல் உரிமை என பல்வேறு வகைகளில் சுந்தர் சி.க்கு பத்து கோடிக்கு மேல் லாபம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: ’இதில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2வது இடம்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்