கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் இலை. “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்.

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலை செரிமானப் பிரச்சினைகளைப் போக்கும். செரிமானப் பிரச்சினைகளால் தான் உணவில் உள்ள கொழுப்பு அப்படியே வயிற்றில் படிந்து, உடல் எடையை அதிகரிக்கிறது. காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் .பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் தன்மை அதிகம் உள்ளது.

கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவுவதுடன், தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரவும் உதவும். கருவேப்பிலையை நன்கு அரைத்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணையிலும் போட்டு நன்கு ஊறவைத்து தலைக்கு தேய்க்கலாம்

கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.