கறிவேப்பிலைக் குழம்பு ரெசிபி

0
1191

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கறிவேப்பிலைக் குழம்பு ரெசிபியை சமைத்து சுவைக்கலாம் வாங்க.

கறிவேப்பிலை இலைகள் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியை அதிகமாக்கும், உடலை வலுவாக்கும், குடல் வாயுவை வெளியேற்றும். மேலும், இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு ஆகும்.

சமைக்க தேவையானவை
  •  தோலுரித்த சின்ன வெங்காயம் – 10
  •  வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
  •  தாளிப்பு வடகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
  •  புளி – சிறிய எலுமிச்சை அளவு
  •  பூண்டு – 8 பல்
  •  வெல்லம் – ஒரு சிறிய துண்டு,
  •  கறிவேப்பிலை – சிறிதளவு
  •  நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
உணவு செய்முறை : கறிவேப்பிலைக் குழம்பு

1.

வறுத்து அரைக்க: கறிவேப்பிலை – 3 கைப்பிடி அளவு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி – தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5.

2.

முதலில் புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவேண்டும். பின்னர் வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவேண்டும் .

3.

பின்னர் ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவேண்டும் . பின்னர் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவேண்டும்.

4.

பின்னர் இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.

5.

பின்னர் மேலேஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு,குழம்பு கெட்டியாகி வரும்போதுகறிவேப்பிலை தூவிஇறக்கவேண்டும்

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here