கர்நாடக தேர்தல் : காங்கிரஸ் எம்எல்ஏவிடம் பேரம் பேசிய ஆடியோ

0
880

கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் பசன்ன கௌடா தத்தா , ரெய்ச்சூர் எம் எல் ஏவிடம் பாஜகவின் ஜனார்த்தன ரெட்டி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி “எங்கள் பக்கம் நீ வந்தால் அமித்ஷா உன்னோடு உட்கார்ந்து பேசுவார். என்ன பதவி வேண்டுமானாலும் தருவார். நீ 100 மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம் ” என்று பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார் .

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா “தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் ஜனார்த்தனரெட்டி, எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. என்ன என்ன சலுகைகள் வழங்குவதாக அவர்கள் கூறினார்கள், எப்படி குதிரைபேரத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் அந்த ஆடியோவில் உள்ளது என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here