கர்நாடக தேர்தல் : எடியூரப்பா பேரம் பேசும் 3வது ஆடியோ

0
552

கர்நாடக சட்டப் பேரவையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தற்போது எடியூரப்பா , காங்கிரஸ் எம் எல் ஏ பி சி பாட்டிலுடன் பேரம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மூன்றாவது வெளியான ஆடியோ : எடியூரப்பா காங்கிரஸ் எம் எல் ஏ பி சி பாட்டிலுடன் பேசும் ஆடியோவில் :
கொச்சிக்கு போக வேண்டாம். உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறேன், எங்கள் பக்கம் வரும்போது 3 எம் எல் ஏக்களை உடன் அழைத்து வரவும் என்று கூறுகிறார்.

கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார் .

இதைத் தொடர்ந்து நேற்று பசன்ன கௌடா தத்தா , ரெய்ச்சூர் எம் எல் ஏவிடம் பாஜகவின் ஜனார்த்தன ரெட்டி பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இன்று (சனிக்கிழமை) எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா , காங்கிரஸ் எம் எல் ஏ ஹெப்பரின் மனைவி வனஜாக்‌ஷியிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியது . தற்போது மூன்றாவதாக எடியூரப்பா , காங்கிரஸ் எம் எல் ஏ பி சி பாட்டிலுடன் பேரம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இரண்டாவது வெளியான ஆடியோ : எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா , காங்கிரஸ் எம் எல் ஏ ஹெப்பரின் மனைவி வனஜாக்‌ஷியிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில் “எங்கள் பக்கம் வந்தால் கோடி கணக்கில் பணம், அமைச்சர் பதவி, உங்கள் மகனின் மேல் இருக்கும் எல்லா கேஸையும் வாபஸ் வாங்குவோம் ” என்று பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

முதலில் வெளியான ஆடியோ: https://twitter.com/WithCongressKR/status/997476283050213376

நேற்று வெளியான ஆடியோவில் “பசன்ன கௌடா தத்தா , ரெய்ச்சூர் எம் எல் ஏவிடம் பாஜகவின் ஜனார்த்தன ரெட்டி பேசியது . அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி “எங்கள் பக்கம் நீ வந்தால் அமித்ஷா உன்னோடு உட்கார்ந்து பேசுவார். என்ன பதவி வேண்டுமானாலும் தருவார். நீ 100 மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம் ” என்று கூறியிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here