கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் போட்டி

0
534

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2,654 வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 883 பேர் கோடீஸ்வரர்கள். 645 பேர் மீதுகுற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) மற்றும் கர்நாடக தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

645 வேட்பாளர்களில் 254 வேட்பாளர்கள் மீது மோசமான கிரிமினல் வழக்குகளும், 391 பேர் மீது சாதாரண கிரிமினல் வழக்குகளும் பதிவாகியுள்ளது. .

223 பாஜக வேட்பாளர்களில் 208 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 220 காங்கிரஸ் வேட்பாளர்களில் 207 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 199 மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களில் 154 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். சுயேச்சையாக 1,090 பேர் போட்டியிடுகின்றனர், இவர்களில் 199 பேர் கோடீஸ்வரர்கள்.

பாஜக வேட்பாளர்களில் 83 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் 58 பாஜக வேட்பாளர்கள் மீது கொலை உட்பட மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்களில் 59 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் 32 வேட்பாளர்கள் மீது மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 29 பேர் மீது மோசமான கிரிமினல் வழக்குகளும் பதிவாகியுள்ளது . 1090 சுயேச்சை வேட்பாளர்களில் 108 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 70 பேர் மீது மோசமான கிரிமினல் வழக்குகளும் பதிவாகியுள்ளது .

கோவிந்தராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணா ரூ.1,020 கோடி சொத்துகளுடனும், ஒசக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜு ரூ. 1015 கோடி சொத்துகளுடனும், கனகபுரா தொகுதி எரிசக்தி அமைச்சர் டி.கே.சிவகுமார் ரூ840 கோடி சொத்துகளுடனும் தேர்தலில் களமிறங்கியுள்ளார்கள் .

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here