கர்நாடகா : யாருக்கு வாய்ப்பு ?

0
1156

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிவடைந்தது.
இத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது .

மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரு தொகுதி தவிர மற்ற 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரண்டு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவில்லை. பாஜக வேட்பாளர் காலமானதால் ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வருகிற 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு – ‘எக்ஸிட் போல்’ முடிவுகள் வெளியாகியுள்ளது . தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன . வாக்குப்பதிவு நடந்த 222 தொகுதிகளில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும்.

ஏபிபி & சி வோட்டர் (ABP NEWS & CVOTER) நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 87 முதல் 99 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜகவுக்கு 97 முதல் 109 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 21 முதல் 30 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆஜ்தக் & ஆக்ஸிஸ் (Aaj Tak & Axis ) நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 106 முதல் 118 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜகவுக்கு 79 முதல் 92 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 22 முதல் 30 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ரிபப்ளிக் டிவி & ஜன் கி பாத் (Republic Tv & Jan Ki Baat) நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 73 முதல் 82 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜகவுக்கு 95 முதல் 114 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 32 முதல் 43 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நியூஸ் எக்ஸ் & சி என் எக்ஸ் (NewsX & CNX ) நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 72 முதல் 78 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜகவுக்கு 102 முதல் 110 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 35 முதல் 39 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

டைம்ஸ் நௌ & வி எம் ஆர் (Times Now & VMR) நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 103 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜகவுக்கு 80 முதல் 93 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 31 முதல் 39 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here