“குதிரைபேரத்துக்கு மடியவில்லையென்றால் வீட்டிற்கு சிபிஐ, வருமானவரித்துறையை அனுப்பும் அமித்ஷா “

0
277

கர்நாடக பாணியில் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியான தங்களை கோவா , மணிப்பூர், மேகாலாயா , மாநிலங்களில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து வலியுறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவும் பீஹார் ஆளுநரை சந்தித்து தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கிறார்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப்பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் இருந்த போதும் தனிபெரும் கட்சியாக 104 இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்தார்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 16 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது . ஆனால் 14 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, மற்ற கட்சிகளுடன் தேர்தலுக்குபின் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தது. கோவாவில் தற்போது மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

2017 ஆம் ஆண்டு நட்ந்து முடிந்த மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது , ஆனால் 21 இடங்களைப் பெற்ற பாஜக மற்ற கட்சிகளுடன் தேர்தலுக்குபின் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தது.

2018 ஆம் ஆண்டு நட்ந்து முடிந்த மேகாலாயா சட்டப்பேரவைத் தேர்தலில் 21 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த போதிலும் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மற்ற கட்சிகளுடன் தேர்தலுக்குபின் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறையைப் பின்பற்றி, கோவா, மணிப்பூர், மேகாலாயா ஆகிய இடங்களில் தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும்
அணிவகுப்பாக சென்று ஆளுநரிடம் முறையிட உள்ளதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது .

கோவாவைப் போலவே பீஹாரிலும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சியைக் கலைத்துவிட்டு, தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ராஷ்ட்ரிய ஜனதா தளம் உரிமை கோர உள்ளது.பீஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 80 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து வலியுறுத்த திட்டமிட்டுள்ளோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். .

பாஜக எவ்வாறு தன் மெஜாரிட்டியை நிரூபிக்கும். அமித்ஷா தான் ஒரே வழி, அவர் குதிரைபேரத்துக்கு வழிவகுப்பார் அது முடியவில்லைஎன்றால் சிபிஐ அல்லது வருமானவரித் துறையினரை வீட்டுக்கு அனுப்புவார் . இது பாஜகவின் அராஜகம் .

இப்போதுகூட நாங்கள் இதற்காக ஒருங்கிணையவில்லையென்றால் கர்நாடகாவில் நடந்தது மாதிரி நடைபெறப் போகும்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத் தேர்தல்களில் நடக்கும் என்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்

கடந்த கால தேர்தல்களில் , தனிப்பெரும் கட்சிகளை விடுத்து, பாஜக கூட்டணிக்கே ஆளுநர்கள் பச்சைக் கொடி காண்பித்த நிலையில், கர்நாடகாவில் மட்டும் வரலாற்றை மாற்றி எழுத முயன்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்