கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது

0
1658

கர்நாடகா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மாஜத கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் குமராசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது .  


பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் ஆணையர் அலோக் குமார் உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில்,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால் , பெங்களூரு மாநகரத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாட சட்டப்பேரவையில்  குமாரசாமி உருக்கமாகப் பேசினார்.

கர்நாடக சட்டப்பேரவையில் வியாழன் அன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. செவ்வாய் மாலை வரைக்கு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அப்போது அவர் கூறியதாவது:

நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்; தவறுகளை சரிசெய்யும் நேரம் இது

காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது. அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன்.

ஊழல் செய்து பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை. வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன்; பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன் என்றார்.