கர்நாடக மாநிலத்திலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 62 அர்ச்சகர்களை நியமித்தது. அதில் 26 பேர் பிராமணர்கள்; மீதமுள்ள 36 பேர் பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள்; அதில் தலித்துகள் 6 பேர். கேரள அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

siddaha

இந்நிலையில், கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தலித் சமூகத்தைச் சேந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், அரசின் இந்த முடிவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் அம்மாநிலத்தில் ஏறக்குறைய 35,000 கோவில்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்: டெங்குவா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ அவசர நிலையை ஏன் அறிவிக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்