கர்நாடகத்தில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு

0
370

கர்நாடகத்தில் புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாட இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78, பாஜக 104, மஜத 38, சுயேச்சைகள் 2 ஆகிய இடங்களை பிடித்தன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில்,முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து குமாரசாமி ஆளுநரை சந்தித்து காங்கிரஸ், மஜத கூட்டணி சார்பாக தன்னை முதல்வராக பதவியேற்க அழைக்குமாறு கடிதம் அளித்தார்.

104 இடங்களில் வென்ற பாஜகவும் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மாலை 5 மணியளவில் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் எடியூரப்பாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது .

ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து மஜத, காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. .

இதையும் பாருங்கள்: சில சோற்றுப்பருக்கைளுள் மறையும் பெரும் அரசியல் பூசணிக்காய்கள்!

இதையும் பாருங்கள்: வேலைகளைத் தேர்வு செய்வது எப்படி? நமக்குப் பிடித்த வேலைகள் எப்போது கிடைக்கும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்