கரோனா வைரஸ் உருவாக இதுதான் காரணம்?

Pangolins could be the link that enabled coronavirus to spread from bats to humans, Chinese scientists claim

0
3605

சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை இன்று(சனிக்கிழமை) 722ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகரித்துள்ளது. மேலும், கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 34,546 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், கரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வைரசுக்கு காரணமாக வவ்வால்கள் மற்றும் பாம்புகள் என கருதப்பட்ட நிலையில், தற்போது அலங்கு எனப்படும் எறும்பு தின்னிகளிடமிருந்து பரவிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனர்களின் உணவு பொருட்களில் ஒன்றான அலங்கு எறும்பின் செதில்கள் மருத்துவ குணம் கொண்டதாகவும், கலை பொருட்கள் செய்வதற்கும் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. எறும்பின் செதில்களை மூடநம்பிக்கையின் பேரில் அவர்கள் அதிகம் வாங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது,  நடத்தப்பட்ட ஆய்வில் அலங்குவின் உடலில் உள்ள கிருமிகள் கரோனா வைரசுடன் 99 சதவீதம் ஒத்து போவதாகவும் தென்சீன பகுதியில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பலகோடி மக்களின் உயிரை பறிக்கும் கரோனா வைரஸ் உருவாக காரணமாக இருப்பது அலங்கு எனப்படும் எறும்பு தின்னிகள் தான், என சீன விஞ்ஞானிகள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here