கரோனா வைரஸிக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?: சீன கோடீஸ்வரரின் அதிர்ச்சி தகவல்

Exiled Chinese businessman Guo Wengui recently revealed leaks from Wuhan crematoriums. He claims based on the number of bodies their furnaces are burning, the death toll could be as high as 50,000.

0
372

சீனாவில் ‘கொரோனாவைரசால் தற்போது,908 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்  என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோவெங்கூய் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது. 

தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டஉடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். மேலும், 15 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீன அரசு இவை அனைத்தையும் மறைத்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சீனசுகாதாரத் துறை,3.8 கோடி பேர் வசிக்கும் வுஹானில் 50 லட்சம் பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மூலமும் இந்த வைரஸ் பரவக் கூடும். அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சீன கோடீஸ்வரர் வெளியிட்டுள்ள தகவல்
முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுவதுடன் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here