கரோனா வைரசுக்கு புதிய பெயர் : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

The World Health Organization says the official name for the disease caused by the new coronavirus is Covid-19.

0
1155

சீனாவின் வுஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு கோவைட்-19′(COVID-19) என்ற புதிய பெயரை சூட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று(செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது. 

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்: 

கரோனா வைரஸுக்கு ‘கோவைட்-19’ என்று பெயர் சூட்டியுள்ளோம். இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளது. 

COVID’ என்ற இந்தப் பெயரில் CO’ என்பது கரோனா (CORONA) என்ற வார்த்தையையும், VI  என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், D  என்பது நோய்(DISEASE) என்ற வார்த்தையையும் மற்றும் வைரஸ் பரவிய ஆண்டான 2019 ஆகியவற்றை இணைத்து கோவைட்-19 (Covid-19) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸை தவறான பெயர்களைக் கொண்டு குறிப்பதைத் தடுக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட இந்த கரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 43 ஆயிரத்து 140 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here