கரு.பழனியப்பனின் கள்ளன்: கிளம்புமா சாதி எதிர்ப்பு?

0
240

பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகுக்கு அறிமுகமானவர், கரு.பழனியப்பன். முற்போக்குச் சிந்தனை, இலக்கிய ஈடுபாடு என்று கரு.பழனியப்பனின் பயோடேட்டா இரும்பு மாதிரி எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க். ஆனால், அவர் எடுக்கும் படங்கள் நாலு நாள்கூட தாக்குப் பிடிக்காமல் பொலபொலவென உதிர்கின்றன. கடைசியாக, மந்திரப் புன்னகை என்ற படத்தை இயக்கி நடித்தார். அதுவும் நாலுநாள்தான்.

தனது கற்பனையை கசக்கிப் பிழிந்து, கிராமபோன் என்ற கதையை தயார் செய்தார். அவரே நடிப்பதாகவும் திட்டம். இன்றைய தேதிவரை கிராமபோனை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. அதனால், படங்களில் நடிப்பது என முடிவு செய்துள்ளார்.

சந்திரா இயக்கும், கள்ளன் படத்தில் கரு.பழனியப்பன் நாயகன். இது தவிர வேறு இரு படங்களிலும் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கள்ளன் என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன், ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸ் ஒரு படத்தை தயாரித்தது. ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்க, இளைய மகன் ரவி கிருஷ்ணா நடித்தார். தமன்னா, இலியானா இருவரும் இந்தப் படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டனர். ரத்னத்தின் கடன் என்ற படுகுழியை தோண்டியதும் இந்தப் படம்தான்.

கள்ளன் என்ற பெயர் குறிப்பிட்ட சாதியை குறிக்கிறது என, அந்த சாதியைச் சேர்ந்தவர்கள், கள்ளன் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அப்பெயரை, கேடி என்று மாற்றினர்.

சாதி அபிமானத்தால் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பிய பெயரைத்தான் இப்போது தேர்வு செய்திருக்கிறார்கள். எப்போது யார் மூலம் எதிர்ப்பு வரும் என்று சொல்ல முடியாது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்