கருப்புப் பணம் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 கோடி வரை பரிசு

0
233

கருப்புப் பணம் பற்றி தெரிவித்தால் ரூ.1 கோடியும் ,வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணம் பற்றி தெரிவித்தால் ரூ5 கோடியும் அளிப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது .

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றி உரிய தகவல் அளிக்கும் நபருக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பினாமி பணப்பரிமாற்றம், பினாமி சொத்துக்கள், பினாமி சொத்துக்கள் மூலமாக வருவாய் ஈட்டுதல், கருப்புப் பணம் பதுக்கல் போன்றவை குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என்று வருமான வரித்துறை தனது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘கருப்புப் பணம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கான பரிசு திட்டம் 2018’ன் படி, கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள்
குறித்து சரியான தகவலை அளித்து பொதுமக்கள் ரூ.1 கோடி வரை பரிசுத் தொகை பெறும் வகையில்
வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போல, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம், பினாமி சொத்து, முதலீடு, வங்கி வைப்பு போன்றவை குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு ரூ.5 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்காக கருப்புப் பணம் (வருமான வரித்துறையில் கணக்குக் காட்டாமல், வெளிநாட்டில் இருந்து வரும் வருவாய் அல்லது சொத்து) வரிச் சட்டம் 2015ன் படி, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றி தகவல் அளித்தால் வழங்கப்பட்டு வந்த பரிசுத் தொகை ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் முதலீடுகளை, கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதால், அந்த தீவிரத்துக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை பரிசுத் தொகையாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது பற்றி தகவல்கள் அளிக்க அல்லது பெற வருமான வரித்துறை பொது மேலாளர் (விசாரணை) அல்லது அவரது பொறுப்பை ஏற்று பணியாற்றி வருவோரை தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டினரும் தகவல் அளித்து பரிசுத் தொகையைப் பெறலாம்.

கருப்புப் பணம் பற்றி தகவல் அளிப்போரின் அடையாளம் மிக ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த பரிசுத் தொகை திட்டம், உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், இதுபற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இந்திய வரித்துறை அலுவலகத்தையோ அல்லது இணையதளத்தையோ நாடலாம்.

தகவல் அளித்தவரின் விவரம், அவருக்கு அளிக்கப்படும் பரிசுத் தொகை என அனைத்துமே ரகசியமாக வைக்கப்படும். சட்ட நடவடிக்கைகளின் போது, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் விவரம் அளிக்கப்படும். இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினரும், இந்த திட்டத்தின் கீழ் கருப்புப் பணம் குறித்து தகவல் அளித்து பரிசுத் தொகையினைப் பெறலாம்.

சிபிடிடீ, (CBDT)
நார்த் பிளாக்,
புது தில்லி என்ற முகவரியிலோ அல்லது member.inv@incometax.gov.in என்ற மின்னஞ்சல்
முகவரியிலோ தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here