கலைஞர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்றும் வயதின் காரணமாக அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது கடினமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை தற்போது வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறியுள்ளது.

Dj6xb0UVsAAsiUa

தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவை சந்தித்து வருவதால் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அவர்களது குடும்பத்தினர் காலை முதல் மருத்துவமனையில் இருக்கிறார்கள். முதன்முறையாக தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை மாற்றியதை தொடர்ந்து, நோய்த் தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. பிறகு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை 28-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டனர்.

3 நாட்களுக்கு தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டு நின்று, எழுந்துவா தலைவா எழுந்துவா” என்று கண்ணீர் மல்க கோ‌ஷமிட்டனர். நிறைய தொண்டர்கள் இரவு-பகல் பாராது ஆஸ்பத்திரி முன்பே தூங்கி எழுந்தனர்.

அடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கருணாநிதி உடல்நிலை சீராகி விட்டதாக தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் நேற்று முதல் கருணாநிதிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.கல்லீரல் சிகிச்சையில் பிரபலமான நிபுணர் முகமது ரேலா மூலமாக சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் மருத்துவமனை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் அறிக்கையில்தான் இதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும்.

அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை (திங்கள் கிழமை) அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது.

கருணாநிதி உடல்நிலை பின்னடைவை சந்தித்து வருவதால் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அவர்களது குடும்பத்தினர் காலை முதல் மருத்துவமனையில் இருக்கிறார்கள். தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்