விருதுநகரில் புகழ் பெற்ற கரண்டி ஆம்லெட் செய்து செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

IMG_2658

தேவையான பொருட்கள்:

. முட்டை – 1

. சின்ன வெங்காயம் – கைப்பிடி

. கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் – சிறிதளவு

. எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

இதையடுத்து மிளகுத் தூள் தூவி, கலக்கிய முட்டையை ஊற்றவும். சிறிது நேரம் கழித்து, அதனை திருப்பி போடவும். சுடச் சுட சுவையான கரண்டி ஆம்லெட் ரெடி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்