திராவிட அரசியலைப் பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், வரும் புதன்கிழமை இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

முன்னதாக அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணாநிதியை ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அதேபோன்று நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்தார். இதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை (இன்று), தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், அரசியலில் தனக்கு மூத்தவர் என்ற முறையில் விஜயகாந்த்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்