கமல், ரஜினி யாருக்கு ஆதரவு? – சமந்தா பதில்

0
356

நடிகர், நடிகை யாராக இருந்தாலும் அவரிடம் பேட்டி எடுக்கையில் அரசியலில் குதிப்பீர்களா, தனிக்கட்சி தொடங்கி சிஎம் ஆவீர்களா என்று கேட்பது தமிழ் பத்திரிகையாளர்களின் வழக்கம். இந்த கேள்வி இல்லாமல் அவர்களின் பேட்டி நிறைவுபெறாது. இந்த கேள்விகள் காரணமாகவே அரசியலுக்கு வந்த நடிகர், நடிகைகள் அதிகம். இன்று சிஎம் ஆசையில் திரியும் அத்தனை நடிகர், நடிகைகளின் அரசியல் அசையை தூண்டிய திரி இந்த கேள்வியாகவே இருக்கும்.

இன்று இந்த மெயின் கேள்வியுடன் துணைக்கேள்வியாக கமல், ரஜினி இருவரில் யாரை ஆதரிப்பீர்கள் என்பதையும் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். ரங்கஸ்தலம் வெற்றியைத் தொடர்ந்து பேட்டியளித்த சமந்தாவிடமும் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

கமல், ரஜினி இருவரில் யாரை ஆதரிப்பீர்கள்?

இந்த கேள்வியை தொடர்ந்து கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி தெரியாது. இவர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் என சமந்தா பதிலளித்தார்.

மக்களுக்கு யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தெரியும் என்ற அளவுக்கு சமந்தா தெரிந்து வைத்திருப்பது நல்ல விசயம் .

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்