ரஞ்சித் இயக்கத்தில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் பரவலான பாராட்டை பெற்று வருகிறது. இந்தப் படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவருக்காக பரியேறும் பெருமாள் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த கமல் ரஞ்சித்தையும், மாரி செல்வராஜையும் வரவழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இது குறித்து ரஞ்சித் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பரியேறும்பெருமாள் திரைப்படத்தை விரும்பி கேட்டு பார்த்து பாராட்டிய உயர்திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் அவர்களுக்கு நன்றி!!! பெரும் மகிழ்ச்சி!!!” என குறிப்பிட்டுள்ளார்.

கமலும் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். “மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். Carry on the good work @beemji” என அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here