உலக நாயகன் கமல்ஹாசன் இன்று(வியாழக்கிழமை) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கமல்ஹாசன்  திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்று துவங்கி 3 நாட்களாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 9ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் நான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

எந்த நிகழ்ச்சிகளுக்கும் வராத அஜித் உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் விஜய்யும் கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் தளபதி 64 பட ஷூட்டிங்கில் விஜய் தற்போது உள்ளார். அதனால் அவர் 9ஆம் தேதி வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் பேனர்கள், ஃபிளெக்ஸுகள் வைக்கக் கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here