கமல்ஹாசன் வெளியிட்ட தொழில் துறைக்கான 7 வாக்குறுதிகள்

0
48

2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஐந்தாம் கட்டபரப்புரையின் போது, மக்களிடம்பேரெழுச்சியை பார்க்கிறோம், இதுசந்தோஷமாக இருக்கின்றது என்றார்.

தொழில் துறைக்கான 7 வாக்குறுதி அறிவிக்கிறோம் என்று கூறிய கமல்ஹாசன், அவற்றை பட்டியிலிட்டார். அதன்படி,

1. புத்தாக்கம்மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுக்கான துறை
அறிவியல் தொழில்நுட்பங்கள், புதியதொழில் முனைதல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அவற்றை நடைமுறை சாத்தியமாக்கிடவும், தொழில்துறை புரட்சி 4.0க்கு வித்திடுவதற்கு ஏதுவாக புத்தாக்கம் மற்றும்புதிய சாத்தியக்கூறுகளுக்கான துறை நிறுவப்படும்

2. தொழில்துறையுடன்ஒருங்கிணைந்த அணுகுமுறை
முதல்வர் தலைமையில், அரசு, ” மதியுரைக்குழு” ஒன்றினைநிறுவி, அரசாங்கம் – தொழில் – கல்வி -அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒவ்வொருகாலாண்டிலும், ” கலந்தாலோசனை கூட்டம்” நடத்துவதற்கான முன்னெடுப்புகளை செய்வோம்.

3. சிறு, குறு மற்றும் நடுத்தரநிறுவனங்களை வலுப்படுத்துதல்
நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க முயற்சிகள் மூலமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்பணப்புழக்கத்தை எங்கள் அரசு உறுதி செய்யும்.

4. குறைந்தவளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு
பெரிய தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் கிளைஅலுவலகங்களை, வளர்ச்சி குறைந்த பகுதிகளில்அமைத்திட ஊக்குவிக்கப்படும். அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திநகர்ப்புறம் நோக்கிய நகர்வுகள் கட்டுப்படுத்தப்படும்

5. அமைப்புசாராதொழிலாளர் வலுப்படுத்துதல்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு துறையில் கட்டாய மற்றும் விரிவானகாப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் மற்றும்வேலை பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டு வருவதன் மூலம் அவர்களும் அமைப்புசாராதொழிலாளர்களாக முறைப்படுத்தப்படுவர்

6. ஒவ்வொருமாவட்டத்திலும் தொழில் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்
ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் பொது மற்றும் தனியார்நிறுவனங்கள் ஒருங்கிணைந்து புதிய திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்

7. வளர்ச்சிக்கானதொழில்துறை முதலீட்டு திட்டம்
புதிய தொழில்துறை முதலீடுகள் செய்ய முற்படும்போது, முன்மொழிவு செய்வது முதல் அதை செயல்படுத்தும் வரைமுறையான காலக்கெடுவுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம். அதன் மூலம் முதலீடுசெய்யும் வணிக நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டை அடைய வழிவகை செய்யப்படும்.

இதன் பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்கூறியதாவது: மயிலாப்பூர் தொகுதியில்கமல்ஹாசன் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், அது தகவல் தான் என்றும்அதை நான் சொல்லவில்லை எனவும் கூறினார்.மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்றகேள்விக்கு,கண்டிப்பாகபோட்டியிடுவேன் என்றும் பதிளித்தார். கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்தகமல்ஹாசன்,கூட்டணி குறித்து இப்போதுமுடிவு சொல்ல முடியாது என்றும் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மக்கள்நீநி மய்யத்திற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்காது என்று அமைச்சர்கருப்பண்ணன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, பதிலளித்த கமல், அதுஅவரது பிரார்த்தனை என்றார். மேலும், எங்கள்பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here