கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது?

0
139

லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இன்னும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கே முடியாததால் தற்போதைக்கு இந்த கூட்டணி இணைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

அதேநேரம் அவரது புதிய படம் அவரது சினிமா முன்னோடி ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் அவர்களுடந்தான் என நீண்ட காலமாக ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இப்போது, அவர் அறிக்கப்படவுள்ள திரைப்படம் நிச்சயம் கமலுடன் இருக்கவே வாய்ப்பிருப்பதாகவும், இந்த படத்திற்கு ‘எவ்னென்று நினைத்தாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் த்ரில்லர் ஜானர் இல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here