1.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ஷங்கர் இயக்கி வரும்இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்கி விட்டு ஆந்திரா சென்றுள்ளனர். சில காட்சிகளை அங்குள்ள ராஜமுந்திரி சிறையில் படமாக்குகின்றனர். இதற்காக விசேஷ அனுமதி பெற்று சிறைக்கு வளாகத்திற்குள்  சென்ற கமல்ஹாசனை

அங்குள்ள போலீசார் வரவேற்பு அளித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

சிறைக்குள் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது. இது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியன்-2 திரைப்படத்திற்காக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வருடம் பிக்பாஸ் 4-வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் விரும்பவில்லை என்றும் அவருக்கு பதிலாக சூர்யா, மாதவன், சிம்பு ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்குவார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை நிகழ்ச்சி குழுவினர் மறுத்துள்ளனர்.

2.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத் தமிழன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.

3.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள”நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படத்திற்கு தணிக்கை துறையினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர்27ஆம் தேதி வெளியாக உள்ளது.

4.

ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100 சதவீத காதல் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

5.

சாரதி இயக்கத்தில் ஷாம், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள காவியன் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷ்யாம் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் தலைவி திரைப்படத்திற்காக முக வார்ப்பு ஒப்பனை பரிசோதனை நடைபெற்று முடிந்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ள இதில் கங்கனா ரனாவத் 4தோற்றங்களில் நடிக்க உள்ளார்.

7.

பெண் காவலர்கள் படும் பணி சங்கடங்கள் குறித்து பேசியுள்ள படம் “மிக மிக அவசரம்”. இப்படத்தின் முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள “மிக மிக அவசரம்” திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here