கமல்ஹாசன் டிரம்ப், கிம்மைச் சந்தித்தால் கூட கவலையில்லை – ஜெயக்குமார்

0
474

மக்களின் வசதிக்காகத்தான் சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் போடப்படுகிறன்றன. அரசின் நன்மைக்காக அல்ல என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் –

உடலும் உள்ளமும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு யோகா அவசியம். அதனால் அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் , தமிழகம் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஓரளவு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்று. நம்முடைய தமிழகம் வளர்ச்சிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மக்களின் வசதிக்காகத்தான் சாலை உள்ளிட்ட திட்டங்கள் போடப்படுகிறது. எல்லாத் திட்டங்களும் மக்களுக்காகவே போடப்படுகிறது. அரசாங்கத்தின் நன்மைக்காக எந்த ஒரு திட்டமும் இல்லை. நாட்டுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியம்.இழப்பீடு தொகையும் 3 மடங்காக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டு பேசலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்கு “பாஜகவின் பார்வைக்கு ஏங்கிக்கிடந்தவர்கள் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார் .

மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடனான சந்திப்புகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும், அது அவரது உரிமை. அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்கையும்கூட சந்திக்கட்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம், மக்களோடு மக்களாக இருக்கிறோம் அதனால் கமல்ஹாசன் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்தது பற்றி நாங்கள் பொருட்படுத்தவில்லை”என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here