பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விவேக். கடந்த 32 ஆண்டுகளில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான உச்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் கமலுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாகக் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவியது. 

இந்நிலையில், விவேக் அதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்-க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.