கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான்: விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்

0
108

நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக நடிக்க இருக்கும் தலைவன் இருக்கின்றான் திரைப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான தேவர் மகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தைதான் கமல் தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் அது என்ன கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் பட கதைப்படி நாசர் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில், அவரது மகனாக நடிக்கும் விஜய் சேதுபதி, கமலை பழிவாங்க துடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், முதல் பாகத்துக்கு இளையராஜா இசையமைத்த நிலையில் இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் தெனாலி படத்துக்கு பின் கமலுடன் இணைகிறார். பாடல்கள் அமைக்கும் பணியை ரஹ்மான் முடித்துக் கொடுக்க கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இந்தியன் 2 வுக்கு  முன்னதாகவே இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here