நடிகர் கமலஹாசனை மிரட்டுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்திய ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, வாக்களித்திருக்கக் கூடியவர்களுக்கு, ஓட்டுரிமைப் பெற்றிருக்கக் கூடியவர்களுக்கு ஜனநாயக ரீதியில் ஒரு அரசை விமர்சிப்பதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில்தான் திரு. கமல்ஹாசன் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார். அப்படி எடுத்து வைத்திருக்கக்கூடிய காரணத்தால், அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய பலர் இன்றைக்கு அவரை மிரட்டுவது, அச்சுறுத்துவது, வழக்குப் போடுவேன் என்று சொல்வது எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.

பொத்தாம் பொதுவாக ஊழல் நடந்துக் கொண்டிருக்கிறது, முறைகேடு நடந்துக் கொண்டிருக்கிறது, அனைத்துத் துறைகளிலுமே ஊழல் என்றுதான் அவர் சொன்னார். அதற்கே அவர் மீது வழக்கு போடுவோம் என்று சொல்பவர்கள், நான் ஆதாரங்களோடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் விஜயபாஸ்கர் செய்திருக்கக்கூடிய ஊழல், அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய ஊழல், போலீஸ் கமிஷனர் செய்திருக்கக்கூடிய ஊழல் என இந்த ஊழல்கள் மீதெல்லாம் வருமான வரித்துறையினர் மூலமாகவும், அதேபோல தேர்தல் கமிஷன் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்திருக்கக்கூடிய அந்த கடிதங்களின் அடிப்படையில், நான் தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன். கமல்ஹாசன் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், அந்த பிரசாரம், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஊழல் குற்றாச்சாட்டுகள் சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட தயாராக இருக்கிறார்களா? அப்படி, வழக்குப் போட்டால் அதை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம்.” என்றார்.

இதையும் படியுங்கள் : டிக்கெட் கட்டணம் – மக்கள் பக்கம் நிற்பது அரசா, போராடும் திரைத்துறையா?

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்