நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவைப் படிக்க கோனார் உரை தேவைப்படுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துகளைக் கூறி வருகிறார். அவரின் கருத்துகள் பெரும்பாலும், தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் உள்ளது. தற்போதும்கூட அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ”ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என குறிப்ப்பிட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவைப் படிக்க கோனார் உரை தேவைப்படுகிறது என்றார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்