தென்மேற்கு வங்கக் கடற்பகுதியில் காணப்படும் காற்றழுத்த தாழ்வுநிலையால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடற்பகுதியில் மணிக்கு 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனையடுத்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

மார்ச் 13; காலை 9 மணி நிலவரப்படி
மார்ச் 13; காலை 9 மணி நிலவரப்படி

கன்னியாகுமரியிலிருந்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்களின் நிலை குறித்த அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் 51 படகுகளில் சென்ற மீனவர்கள் கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் கோவா கடற்கரைகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்