கனடாவில் நடக்கும் வினய் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா

0
169

நாயகனாக நடித்து வந்த வினய்யை துப்பறிவாளனில் வில்லனாக்கினார் மிஷ்கின். ஆனால், அவர் நாயகனாகத்தான் தொடர்ந்து நடித்து வருகிறார்.

துப்பறிவாளனுக்கு முன்பு அவர் நாயகனாக ஒப்பந்தமான படம் நேத்ரா. வினய்யுடன் தமனும் ஹீரோவாக இதில் நடித்துள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்கம். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை கனடாவில் நடத்துகின்றனர். ஏன் கனடா?

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர். பெரிய பட்ஜெட் படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழாக்கள்தான் வெளிநாடுகளில் நடக்கும். நேத்ராவின் தயாரிப்பாளர் கனடாவைச் சேர்ந்தவர் என்பதால் வினய் படத்துக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்