கந்தக அமில கசிவு அதிகமாக இருப்பதால் மின் இணைப்பு வேண்டும் – ஸ்டெர்லைட்

0
443

கந்தக அமில கசிவு அதிகமாக இருப்பதால் மின் இணைப்பு வேண்டும் என்று ஸ்டெர்லைட் காப்பரின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் இன்று (புதன்கிழமை) கூறியுள்ளது. உடனடியாக செயல்பட்டு அமில கசிவைத் தடுக்காவிட்டால் சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவித்துவிடும் என்று வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.

குழாய் விளிம்புகளில் கடுமையான கசிவு உள்ளது, குழாய் விளிம்புகள் அமில குளத்தில் மூழ்கியுள்ளன என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது . அதனால் உடனே மின் இணைப்பு வேண்டும் என்றும் கோரியிருந்தது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஜூன் 17 ஆம் தேதி அமில கசிவு வெளியான போது சிறிய கசிவுதான் என்று கூறினார்.

அமில கசிவை சரிசெய்ய மீண்டும் மின் இணைப்பு தரவேண்டும் என வேதாந்தா நிறுவனம் கேட்டிருந்தது .மீண்டும் மின் விநியோகம் வழங்கவேண்டும் என ஸ்டெர்லைட் காப்பரின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்து இருந்தது . கந்தக அமில கசிவை சரிசெய்ய மின்சாரம் தேவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது .

கந்தக அமிலத்தின் கசிவின் அளவை அறிந்து, அதனை சரிசெய்து, பொருட்களை வெளியேற்ற மீண்டும் மின் இணைப்பை வழங்கவேண்டும் என அந்நிறுவனம் கோரியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலத்தை
அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 250 மெட்ரிக் டன் அளவு மட்டுமே வெளியேற்ற முடியும் . மேலும், இதற்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு லாரியின் அளவும் தலா 15-20 மெட்ரிக் டன் என்றும் 15 லாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார் . தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களிலுள்ள
தொழிற்சாலைகளுக்கு இந்த அமிலம் அனுப்பப்படுகிறது என்றும் கூறியுள்ளார் . மேலும், ஆலையிலுள்ள ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என நந்தூரி
கூறினார். கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணியில் துணை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலைகள் கண்காணிப்பு நிலையம் மற்றும் பல துறை நிர்வாகிகள் அடங்கிய சிறப்புக் குழு
ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மின் இணைப்பை துண்டிக்கும் முன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமக்கு அறிவிப்பு எதுவும் வழங்கவில்லை . மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு தான் அறிக்கை தரப்பட்டது. பல இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் அபாயகரமான ரசாயனங்கள் தொழிற்சாலை வளாகத்தில் இருப்பதாக அதிகாரிகளுக்கு
தகவல் வந்ததன் பின்னரே அறிவிப்பு வழங்கப்பட்டது என அந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது முன்னிலையில் வந்தது. அப்போது, கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. அப்போது, ஆலைக்குள் ஏற்படும் பேரிழப்பைத் தடுக்க மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து ஜூன் 25-ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here