கத்தரிக்காய் கொத்சு ரெசிபி

0
328

சிதம்பரத்தின் உணவுச்சிறப்பு இந்த கத்தரிக்காய் கொத்சு. அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றுமொரு பெருமை, இதைத்தொடர்ந்து நம் நகரத்தார் அதிகம் வாழும் இடம் சிதம்பரம் ஆயிற்று. எல்லோரும் ருசித்து விரும்பிய இந்த “கொத்சு” அங்கு வசித்து வரும் மக்களிடம் கேட்டறிந்த செய்முறை இங்கு உங்களுக்காக.

வறுத்து பொடித்த மல்லி, மிளகாயின் மண ம் இதன் தனிச்சிறப்பு. இது நமது பிரதான உணவான இட்லி , தோசைக்கு நல்ல சுவை கூட்டும் .

அனைவரும் விரும்பும் ருசியான கத்தரிக்காய் கொத்சு ரெசிபி. சமைத்து ருசிக்கலாம் வாங்க.

சமைக்க தேவையானவை :

 •  கத்தரிக்காய் – 3
 •  தக்காளி – 2
 •  பெரிய வெங்காயம் – ஒன்று
 •  தனி மிளகாய்த் தூள் – அரை மேசைக்கரண்டி
 •  கடலை பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
 •  கடுகு – ஒரு தேக்கரண்டி
 •  மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
 •  தனியா தூள் – ஒரு மேசைக்கரண்டி
 •  எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
 •  கறிவேப்பிலை – 2 கொத்து
 •  புளி – சிறிய எலுமிச்சை அளவு
 •  பச்சை மிளகாய் – 3
 •  உப்பு – ஒரு தேக்கரண்டி

குறிப்பு

உங்கள்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற நாட்டுக் காய்கறி சமையல் வகைகள். நீங்கள் விருப்பிய நேரங்களில் விருப்பிய உணவுகளை சமைத்து சாப்பிடலாம். எப்போதும் உணவு பொருட்கள் தூய்மையாக இருப்பது நன்று. உப்பு மற்றும் எண்ணெய் அளவாக இருத்தால் சுவையாக இருக்கம்

கத்தரிக்காய் கொத்சு செய்முறை :

1.

முதலில் கத்தரிக்காய் கொத்சுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயின் காம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்துக் கொள்ளவும்.

2.

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

3.

மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து 2 கப் புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதன் பிறகு கடலை பருப்பு சிவந்ததும் அதில் தனியா தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும். பின்னர் அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை 2 நிமிடம் வதக்கவும்

4.

பிறகு நறுக்கின தக்காளி போட்டுஒரு நிமிடம் வதக்கி விட்டு அதன் பிறகு கத்தரிக்காயை போட்டு கத்தரிக்காய் வதங்கும் வரை5நிமிடம்வதக்கவும். அதில் கரைத்து எடுத்து வைத்திருக்கும் 2 கப் புளிக்கரைசலை ஊற்றி கலக்கிவிட்டு 6 நிமிடம்கொதிக்க விடவும். 6 நிமிடம்கழித்து கத்தரிக்காய் கொத்சு கொதித்து நுரைத்து பொங்கிவரும் போது ஒரு முறை கிளறிஅடுப்பை சிம்மில் வைத்து விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கி விடவும் சுவையும் வாசனையும் நிறைந்தகத்தரிக்காய் கொத்சு தயார். இதை இட்லி, தோசைக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here