”கதைய மாத்து; எல்லாம் மாறும்”

Centre of Media Persons for Change enters 8th year

0
773

மே 1, 2018இல் எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்திற்கு வாழ்த்துச் செய்தி:

ஐந்தாண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு நாள் எனக்குப் புதிய தலைமுறையில் வேலை போனபோது, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் தமிழ் அரசன், ஹசீஃப், மணிகண்டன், தேவேந்திரன் உள்பட பலரும் வீட்டுக்கு வந்து சந்தித்தார்கள்; வேலை இருக்கிறதோ, இல்லையோ “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று சொல்வதுதானே சங்கத்தின் வேலை; அந்த அன்பும் தோழமையும்தான் முக்கியம். அதனை இவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதற்கு முன்னதாக இலங்கை அரசு 2009இல் செய்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய, காலம் மெக்ரே இயக்கிய “No Fire Zone: Killing Fields of Sri Lanka” படத்தை இந்த மையம் தடையை மீறி திரையிட்டது முக்கியமான நிகழ்வு.

அதற்குப் பின்னர் ஒரு சம்பவம். The Hindu ஆங்கில நாளிதழிலிருந்து அதன் ஆசிரியராக பணியாற்றிய சித்தார்த் வரதராஜன் வேலை நீக்கம் செய்யப்பட்டார். சுப்பிரமணியன் சுவாமி பற்றிய செய்திகளைப் போட மறுத்தார் என்பதுதான் அந்த வேலை நீக்கத்துக்கான முக்கியக் காரணம். அதைப் பற்றிய உரையாடலை இந்த மையம் சென்னை BEFI ஹாலில் ஒருங்கிணைத்தது. டெல்லியிலிருந்து பத்திரிகையாளர் சத்யா சிவராமன் பங்கேற்றார். இது முக்கியமானதொரு வரலாற்றுத் தருணம்.

சமீபத்தில் பத்திரிகை சுதந்திரத்தைக் காக்க திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச முன்னணி, இளந்தமிழகம் ஆகிய அமைப்புகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் பாலன் சொன்னார்: “சென்னை உயர் நீதிமன்றத்தில் பல சங்கங்கள் இருந்தாலும் எம். எச். ஏ. ஏ எனப்படும் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து வந்த வழக்குரைஞர்களைக் கொண்ட சங்கமே வழக்குரைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டங்களின் முன்னணியில் இருக்கிறது.”

அதைப்போல பத்திரிகைச் சமூகத்தின் படையரணாக நாங்கள் இருக்கிறோம் என்பதை ஏப்ரல் 20 ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர்களின் போராட்டம் வழியாக இந்தச் சங்கம் நிரூபித்திருக்கிறது. இன்னும் நூறு வருஷம் இதுபோல படையரணாக இருந்து பத்திரிகைச் சுதந்திரத்தை நாம் பேண வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

”ஹிந்து”வின் கதை

வெள்ளை முடிக்கும் கறுப்பு வேர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here