கதுவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் திடீர் திருப்பம்; சிறப்பு விசாரணைக் குழு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

0
355

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) உறுப்பினர்கள் 6 பேர் மீது சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் , கதுவாவில் எட்டு வயது சிறுமியைக் கோவிலுக்குள் அடைத்து வைத்து, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொன்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லால் சிங் மற்றும் சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கோ அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்கவோ ஜம்மு காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வழக்கு விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும் பதான்கோட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது

குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சண்டீகருக்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கொலைசெய்யப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் மாநிலத்துக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுட்டது.

வழக்கில் குற்றம் சாட்டப்படிருந்த 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்று பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது .

இந்த வழக்குத் தொடர்பாக, கதுவா சிறுமியை அடைத்து வைத்திருந்த கோவிலின் பாதுகாவலராக இருந்த சஞ்சிராம், சஞ்சிராமின் மகன் விஷால் , சஞ்சிராமின் சிறுவயது மருமகன், சிறப்பு போலீஸார் இரண்டு பேர் தீபக் கஜூரியா (டிப்பு) , சுரேந்தர் வர்மா, மற்றும் பர்வேஷ் குமார் (மன்னு) ஆகியோரை கைது செய்திருந்தது. 

சஞ்சிராம் முதன்மைக் குற்றவாளியாக இருக்கிறார். சஞ்சிராமிடம் 4 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்று முக்கிய சாட்சியை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் தலைமை காவலர் திலக் ராஜ் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் தத்தா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஜூன் 8 அன்று பதான்கோட் மாவட்ட குற்றவியல் நீதி மன்றம் வன்புணர்வு மற்றும் கொலை குற்றங்களுக்காக ஏழு பேர் மீது குற்றம் சுமத்தியது.

 மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தேஜ்விந்தர் சிங், குற்றம்சாட்டப்பட்ட சஞ்சிராம் உள்ளிட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் ஆதாரங்களை அழித்ததற்காக உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா, தலைமைக் காவலர் திலக் ராஜ் மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரி சுரேந்தர் வர்மா ஆகிய மூவருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளைத் துன்புறுத்தியதாகவும், பொய் வாக்குமூலம் அளிக்குமாறு அவர்களுக்கு நெருக்கடி அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவ்வழக்கில் சாட்சிகளான சச்சின் சர்மா, நீரஜ் சர்மா, சாஹில் சர்மா ஆகியோர் ஜம்முவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை அந்த நீதிமன்றத்தில் நீதிபதி பிரேம் சாகர் முன்னிலையில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில், இக்குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் இழைத்திருப்பது கண்கூடாகத் தெரிவதாக நீதிபதி பிரேம்சாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எனவே,  சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த காவல்துறை எஸ்எஸ்-பியான ஆர்.கே.ஜல்லா (தற்போது ஓய்வு பெற்றுள்ளார்), ஏஎஸ்பி பீர்ஸாதா நவீத், டிஎஸ்பி-க்கள் ஷேதம்பரி சர்மா, நிசார் ஹுசேன், உதவி ஆய்வாளர் உர்ஃபான் வானி, குற்றப்பிரிவைச் சேர்ந்த கேவல் கிஷோர் ஆகிய 6 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here