காஷ்மீர், கதுவாவில் கொலை செய்யப்பட்ட சிறுமியை, கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அந்த சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகினர். அந்த சிறுமி இறப்பதற்கு முன்பு, பலரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக அவர் இறந்ததாகவும் மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த 54 பேரை நீதிமன்றம் நீக்கிவிட்டது. பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தேஜ்விந்தர் சிங் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இது குறித்து சிறப்பு பொது வழக்கறிஞர் ஜே கே சோப்ரா, மருத்துவர்களின் இந்த வாக்கு மூலமானது, மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. குற்றவியல் பிரிவு அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களால் நான் மிகவும் திருப்தி அடைகிறேன் என்றும் கூறினார்.

கதுவா சிறுமி கொல்லப்படுவதற்கு முன் மயக்க மருந்து ஊட்டப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என தடயவியல் வல்லுனர்கள் கூறியிருந்தனர் இது தொடர்பாகவும் குற்றவியல் பிரிவு மனு ஒன்றை சமர்பித்துள்ளது. மனுவில் சிறுமியை ஜனவரி 10 ஆம் தேதி கடத்தப்பட்டு, ஜனவரி 14 ஆம் தேதி அவள் கொல்லப்பட்டு , ஜனவரி 17 ஆம் தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டாள் .

இந்த வழக்குத் தொடர்பாக, கதுவா சிறுமியை அடைத்து வைத்திருந்த கோவிலின் பாதுகாவலராக இருந்த சஞ்சிராம், சஞ்சிராமின் மகன் விஷால் , சஞ்சிராமின் சிறுவயது மருமகன், சிறப்பு போலீஸார் இரண்டு பேர் தீபக் கஜூரியா (டிப்பு) , சுரேந்தர் வர்மா, மற்றும் பர்வேஷ் குமார் (மன்னு) ஆகியோரை கைது செய்திருக்கிறார்கள் .

சஞ்சிராம் முதன்மைக் குற்றவாளியாக இருக்கிறார். சஞ்சிராமிடம் 4 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்று முக்கிய சாட்சியை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் தலைமை காவலர் திலக் ராஜ் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் தத்தா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஜூன் 8 அன்று பதான்கோட் மாவட்ட குற்றவியல் நீதி மன்றம் வன்புணர்வு மற்றும் கொலை குற்றங்களுக்காக ஏழு பேர் மீது குற்றம் சுமத்தியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் , கதுவாவில் எட்டு வயது சிறுமியைக் கோவிலுக்குள் அடைத்து வைத்து, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொன்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லால் சிங் மற்றும் சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கோ அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்கவோ ஜம்மு காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும் பதான்கோட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது

குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சண்டீகருக்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கொலைசெய்யப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் மாநிலத்துக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கை ஜம்மு-காஷ்மீர் காவல் துறை விசாரித்து வந்தது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here