கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கசிவு: கிராம மக்கள் போராட்டம்

0
625

வெள்ளிக்கிழமை (நேற்று) கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் நெல் வயலில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாயிலிருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் 11 இடங்களில் எண்ணெய் கிணறுளை அமைத்தது. ஆயிரக்கணக்கான அடிக்கு ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெயை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறி, இதற்கு காரணமான ஓஎன்சிஜி நிறுவனம் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் வெள்ளிக்கிழமை (நேற்று) நெல் வயலில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாயிலிருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

தகவலறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு , கிராம நிர்வாகத்துக்கும் , திருவிடைமருதூர் வட்டாட்சியருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓஎன்ஜிசி அதிகாரிகள் குத்தாலம் 7 என்ற எண்ணெய் கிணற்றிலிருந்து கச்சா எண்ணெய் உறிஞ்சுவதையும், குழாய் மூலம் குத்தாலத்துக்கு எண்ணெய் அனுப்புவதையும் நிறுத்தியுள்ளனர். கதிராமங்கலத்தில் வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சனிக்கிழமை (இன்று) ஆய்வு செய்து, அந்த இடத்தை தோண்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: கோடை காலம்: கவனிக்க மற்றும் தவிர்க்க வேண்டியவைகள் எவை?; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்?; முழு விவரம்

இதையும் படியுங்கள்: பத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here