கண்ணையா குமாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

0
272

ஜேஎன்யு பல்கலைக்கழக தேசத் துரோக வழக்கில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எப்படி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என்று டெல்லி போலீஸாரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-இல் நடைபெற்ற நிகழ்வில் தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் கண்ணையா குமார், உமர் காலித் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14-ஆம் தேதி தில்லி போலீஸார் 1200 குற்றப்பத்திரிகையை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுமித் ஆனந்த் முன்னிலையில் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எப்படி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம்? உங்களுக்கு என்று சட்டத்துறை இல்லையா? என்று டெல்லி போலீஸாரிடம் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, இதற்கு தேவையான ஒப்புதலை 10 நாட்களுக்குள் பெறுவதாக பெருநகர மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத்திடம் போலீஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்