சமையலுக்கு அத்தியாவசியமான பொருளில் ஒன்றான வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100க்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்துக்கு. 70 லாரிகளில் தினமும் கொண்டு வரப்படும் வெங்காயம், நேற்று வெறும் 30 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் வெங்காய விலை நேற்று எகிறியது. நேற்றைய கோயம்பேடு மார்க்கெட் விலைப்படி பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.100ம், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.130 என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. விலையை கேட்டதும் சிறு வியாபாரிகள் கொள்முதல் செய்வதை தவிர்க்க தொடங்கினர்.

இதை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: மகராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயம் தமிழகத்திற்கு வருவது குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு தினசரி 70 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது வெறும் 30 லாரிகளுக்கும் குறைவாகவே வருகிறது. விளைச்சல் பாதிப்பு காரணமாக தான் வெங்காய விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. வெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது என்பது முடியாத காரியம். பதுக்கி வைத்து விற்கும் பொருள் வெங்காயம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

மொத்த மார்க்கெட்டில் தான் பெரிய வெங்காயம் கிலோ 100க்கும், சின்ன வெங்காயம் 130க்கும் விற்கப்படுகிறது. ஆனால் அந்த வெங்காயத்தை வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகள் பெரிய வெங்காயத்தை 130 வரையும், சின்ன வெங்காயத்தை கிலோ 180 என்றும் ஏரியாவுக்கு தகுந்தாற் போல் விற்பனை செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், வெங்காயம் மட்டுமல்லாமல் கடந்த வார விலையை ஒப்பிடுகையில் தற்போது கேரட் ரூ.15 விலை உயர்ந் திருக்கிறது. தக்காளி, சவ்சவ் தலா ரூ.10-ம், வெண்டைக்காய் ரூ.20-ம் விலை உயர்ந்திருக்கிறது. அவரைக்காய் மட்டும் ரூ.10 விலை குறைந்துள்ளது. மற்றவகையில் காய்கறி விலையில் மாற்றம் இல்லை.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here