மத்திய அரசு  கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 1000 மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. 

இந்நிலையில் வருமான வரித்துறையில் சமீபத்திய தகவலின்படி நடப்பு நிதியாண்டில் கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்ட பணங்களில், கிட்டத்தட்ட பாதியளவு உயர்மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளே என்பது தெரியவந்துள்ளது. மார்ச், 2019 நிலவுரப்படி நாட்டில் மொத்தமாக 3,291 மில்லியன் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 6,582 பில்லியன் ஆகும்.

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனுவில், கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய்க்கும் மேலான  பணங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் சதவிகிதம்  கடந்த 2017-18 நிதியாண்டில் 67.91%, 2018-19 நிதியாண்டில் 65.93 சதவிகிதமாக இருந்தது. அதேபோல இந்த நிதியாண்டில் தற்போது வரை பிடிபட்டுள்ள கணக்கில் வராத 5 கோடி ரூபாய்க்கு மேலான பணத்தில் 43.22 சதவிகிதம் 2000 ரூபாய் நோட்டுகளாக உள்ளது.

எனினும் கணக்கில் வராத 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபடும் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற அரசுக்கு முன்னாள் பொருளாதார விவகாரங்கள் செயலாளர் எஸ்.சி.கார்க் ஆலோசனை தெரிவித்திருந்தார். அதற்கு அவர் அதிகப்பட்சமாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதைவிட பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அதிகம் எனச் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடதக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here