‘கட்டாய விடுப்பில்’ 32,000 ஊழியர்களை அனுப்ப விமான சேவை நிறுவனங்கள் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி

American Airlines and United Airlines say they will begin to furlough 32,000 employees after lawmakers and the White House failed to agree on a broad pandemic relief package that includes more federal aid for airlines.

0
179

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 1600 பைலட்கள் உட்பட 32,000 ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இவர்கள் பணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கை இன்றே(வியாழக்கிழமை) தொடங்கி விட்டதாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆனாலும் மீண்டும் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உள்ளதாக ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13% பணியாளர்கள் இதன் மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் டெல்டா ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 10,000 கணக்கானோரும் வேலை விடுவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

யுஎஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் கொடுக்க மேலும் 25 பில்லியன் டாலர்கள் தொகையை அரசிடமிருந்து கோரியது.

நிவாரணம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இந்த விமான நிறுவனங்கள் ஊழியர்களிடம் மெமோவில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here