அரசின் அனைத்து நலத்திட்டங்கள் தொடர்பான சலுகைகளையும் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு என அனைத்திற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதியோடு முடிவடைவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

mamta

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து எதிர்த்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அக்.30ஆம் தேதிக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோரின் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்