இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக டிவிட்டரில் #AakhriJumlaBudget என்ற ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும்.

தனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் இந்த #AakhriJumlaBudget ஹேஷ்டேக் இரண்டாவதாக டிரெண்டாகி வருகிறது.

வேலையே இல்லை , வேலையின்மை அதிகரித்து வருகிறது . மோடி அரசு வேலை தருகிறேன் என்கிறது. சிறுகுறு தொழிலை சிதைத்த பிறகு ஜிஎஸ்டியின் சாதனை என்று இந்த அரசு சிலாகிக்கிறது . 50 சதவீதம் கடன் அதிகரித்திருக்கிறது. விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ16.48 அரசு கொடுக்கிறது . விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. எங்களிடம் வந்து ஓட்டு கேட்காதீர்கள். உங்கள் கதை முடிந்தது.

இந்த விவசாயிகள் ஒரு நாளைக்கு ரூ 16.67 என்பதுதான் மோடிஜியின் மாஸ்டர்ஸ்டோரோக்

கெட்ட அரசாங்கங்கள் எப்போதும் பொய் சொல்கின்றன, ஏனென்றால் உண்மையைக் கூற மரியாதையும், தைரியமும் தேவை. இந்தியாவின் ஜிடிபி 7.2 என்று நேற்றுதான் மத்திய அரசால் திருத்தப்பட்டது. ஆனாலும் கூட மத்திய அரசால் 2009-2010இல் எடுக்கப்பட்ட 8.84 ஜிடிபியை தொட முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி, மோசமான அரசு எப்போதும் பொய் சொல்லும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Hariindic/status/1091280526118248450

டியர் மோடிஜி ரூ 17 விவசாயிக்கு போதுமா? அது விவசாயிக்கு சந்தோசம் அளிக்குமா? இது அவர்களை அவமதிப்பது ஆகும். மனிதாபிமானமற்ற அவமானம் இது என்று இவர் பதிவிட்டுள்ளார்.

முதல் வருடம் நான் விவசாயிகளுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்துவேன் .

2 வது வருடம் குறைந்தபட்ச ஆதார விலையை சுவாமிநாதன் அறிக்கைப்படி நான் நிறைவேற்றுவேன்.

3 வது வருடம் நான் அறிமுகப்படுத்தும் பயிர் காப்பீடு பற்றிய செய்தி மிக முக்கியமானதாக இருக்கும்.

4 வது வருடம் வைக்கோல் அழிவதற்கு நான் தீர்வு காண்பேன்

5 வது வருடம் விவசாயிகளுக்கு மாதம் ரூ500 தருகிறேன், ஓட்டு போடுங்க

இந்த பட்ஜெட் பார்த்துட்டு மக்களோட ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா.. அதோ பாருங்க அந்த குட்டி பாப்பா.. அதோட நாக்கு மாதிரி இருந்தது

நாட்டின் காவல்காரரும் , அவருடைய சகாக்களும் விவசாயிகளையும், இளைஞர்களையும், பொது மக்களையும் மீண்டும் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் லாலிபாப் கொடுக்கிறார். மோடி அரசே ஒரு பெரிய லாலிபாப் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்குமுன் கொடுத்த வாக்குறுதிகளை அந்த லாலிபாப் நிறுவனம் மறந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

2014ல் நிறைய ஜூம்லாக்களை (பொய் வாக்குறுதிகளை) சொல்லி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். அதே ஜூம்லாக்களால் பிரதமர் 2019ல் ஆட்சியை இழப்பார். இதனால் அவருக்கு மீண்டும் வாக்களிக்கும் முன் அவர் சொன்ன 15 லட்சம் ரூபாய் வாக்குறுதி என்ன ஆனது என்று யோசித்து பாருங்கள், என்று இவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு பட்ஜெட்டில் 34 கோடி வங்கி கணக்குகளை திறந்து இருப்பதாக பியூஷ் கோயல் கூறினார். 34 கோடி வங்கி கணக்குகள் திறந்து இருக்க வாய்ப்புள்ளது , ஆனால் அதில் எத்தனை கணக்கு பயன்பாட்டில் இருக்கும், எதிலாவது ஒரு ரூபாய்க்கு மேல் போடப்பட்டு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here