கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன்?: சர்ச்சைக்குரிய முடிவு குறித்து தோனி விளக்கம்

0
128

நேற்று(சனிக்கிழமை) ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. 

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் கடைசி ஓவரை ஜடேஜா வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.அப்போது
பிராவோவுக்கு 1 ஓவர் மிதமிருந்த நிலையில், கடைசி ஓவரை வீச ரவீந்திர ஜடஜா அழைக்கப்பட்டார். டோனியின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 2 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், அவரது இந்த முடிவு விமரிசனத்துக்குள்ளானது.

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா பந்தை வீசினார். இந்த ஓவரில் டெல்லி அணியின் அக்சர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால், சென்னை அணி தோல்வியை சந்தித்தது. 

கடைசி ஓவரை பிராவோ வீசாமல் ஜடேஜா வீசியது ஏன் என்ற கேள்வியை ஆட்டம் முடிந்தவுடன் டோனியிடம் எழுப்பப்பட்டது. 

இது குறித்துப் பேசிய கேப்டன் டோனி கூறியதாவது: 

“பிராவோ முழு உடற்தகுதியுடன் இல்லை. களத்தைவிட்டு சென்ற அவரால் திரும்ப வர முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கடைசி ஓவரை ஜடேஜா வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை வீசுவது கரண் சர்மாவா, ஜடேஜாவா என்பதுதான் வாய்ப்பாக இருந்தது. ஜடேஜா வீசினார்.”

“ஷிகர் தவானின்விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம்.ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட்மிக முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல்வேறு வேறுபாடுஇருந்தது. இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிதுஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார்” என தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here