கடைசி ஒரு நாள் போட்டி: வெற்றி பெற்று தொடரை வெல்ல போவது யார்?

0
85

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது.

முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில் தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்த போட்டியில் வென்று டி20 தொடரின் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா அணி ? அல்லது இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் மீண்டும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த தொடர் ஒரே மைதானத்தில் நடைபெறுவதால் முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங்க் செய்த அணியே வெற்றி பெற்றது. இதனால் இன்றும் டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமாக போட்டி இருக்கும் என கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here