கடைக்குட்டி சிங்கம் வெற்றி பெற்றதற்கு படத்தில் நடித்த கார்த்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் படம் எடுப்பதைவிட படத்தை திரைக்கு கொண்டு வருவது கடினம். திரைக்கு வந்த படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். இந்தத் தடைகளை கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் குடும்பம் குடும்பமாகச் சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.

படம் வெற்றி என்பது முதல்நாளே தெரிந்துவிட, முதல் ஆளாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா. அவரது 2டி என்டர்டெயின்மெண்ட்தான் படத்தை தயாரித்தது. படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் கார்த்தி, பாண்டிராஜுக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார். நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கத்துக்காக ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.

கடைக்குட்டி சிங்கத்தை ஏற்றுக் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. அண்ணன் தயாரிப்பில் நடித்த முதல் படம் இது. இதை இவ்வளவு பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்