பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தின் தமிழக திரையுலக விநியோக உரிமை விற்பனையாகியுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்குப் பிறகு கார்த்தி நடித்திருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். கிராமத்துப் பின்னணியில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது.

கடைக்குட்டி சிங்கத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியுள்ளது. இதனை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவரும் கடைக்குட்டி சிங்கம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்