அக்டோபர் 2019 முதல் வாகன பாதுகாப்புச் சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்படுகின்றன. அதன்படி, கார்களில் இரண்டு ஏர்பேக், ABS உடன் கூடிய EDS, சீட் பெல்ட் அலர்ட், வேக கட்டுப்பாடு முதலியவை கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த வாகன பாதுகாப்புச் சட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஹூண்டாய் நிறுவனம் எலைட் i20 காரில் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கெனவே ஹூண்டாய் எலைட் i20 காரில் இரண்டு ஏர்பேக், ABS உடன் கூடிய EDS, சீட் பெல்ட் அலர்ட் ஆகியவை உண்டு. இந்நிலையில் புதிதாக வேக கட்டுப்பாடு மற்றும் பார்க்கிங் கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.

தன் அனைத்து கார்களையும் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்க மாற்றவுள்ளது ஹூண்டாய். அடுத்து கிராண்டு i20 மற்றும் எக்சண்ட் கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மாற்றவுள்ளது ஹூண்டாய். அதேபோல் கிரீட்டாவில் சில மாற்றங்களை ஹூண்டாய் செய்துள்ளது.

பழைய மாடலை விட புதிய மெக்னா மாடலானது 25,000 ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எலைட் i20 காரின் விலை 8,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல் வகை எலைட் i20 கார், 5.50 லட்ச ரூபாயாகவும் டீசல் வகை எலைட் i20 கார், 6.88 லட்ச ரூபாயாகவும் விற்பனை ஆகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்